Featured Posts

**********
♥♥♥♥♥♦♦♦♦♥♥♥♥♥

         விடிந்து நெடுநேரமானபின்னும் விலகாத பனியின் குளிரில் நடுங்கிக்கொண்டே கால்களில் கான்வாஷ் ஷூவை மாட்டிக்கொண்டு வாக்கிங் போக ஆயத்தமானேன். சிறிது தூரம் சென்றபிறகுதான் நினைவுக்கு வந்தது வழக்கமாக கையோடு கொண்டுவரும்  கைபேசியை வழக்கத்துக்கு மாறாக வீட்டிலயே மறந்துவைத்துவிட்டது. சரி ஒருநாள் ஒரு ஒருமணிநேரம் அலைபேசி இல்லாமல்தான் இருப்போமே என்றெண்ணியபடியே வாக்கிங்கை தொடர்ந்தேன்.

             ஒரு கிலோமீட்டர் தூரம் ஒடி வந்து களைப்பானப்பின் வழக்கமாக தாகத்துக்கு நீர் அருந்தும் அந்த டீக்கடையில் ஒதுங்கினேன். வழக்கம்போல் சினேகப்புன்னகை ஒன்றை சிந்தியபடி குவளையை நீட்டினால் #தமிழரசி. (நாயகன் நான் எனும்போது நாயகி வேணுமில்ல)

"என்ன தமிழ் வழக்கம்போல நான் தான் முதல் போனியா?"

"ஆமா, பெரிய போனி... பத்து ரூவா கொடுத்து ஒரு டீ குடிக்க துப்பில்லாம... பச்சத்தண்ணிய ஓசில வாங்கி குடிச்சிட்டு போற நீயெல்லாம் போனிய பத்தி பேசாதடா" அவளிடம் வாயக்கொடுக்கலனா எனக்கு தூக்கம் வராதுங்களே... (புரிஞ்சவங்க சிரிச்சுக்கங்க)

"சர்தாம்போடி... நீ போட்ற டீ குடிக்கிறதுக்கு பச்சத்தண்ணி எவ்வளவோ மேல்" பதிலுக்கு நானும் அவளை வாரினேன்.

"இந்த வாய்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல... சரி சரி, வந்தது வந்துட்ட வழக்கம்போல கவிதை சொல்லிடடு கௌம்பு" என்னிடம் கவிதை கேட்டு பெறும் ஒரே ஜீவன் தமிழ் மட்டும்தான்.

அவளுக்காக ஆய்ந்து எடுத்து வந்த முத்... (வாய பொத்தாதீங்க விடுங்க) முத்துக் கவிதைனு சொல்ல வந்தேன்...
(எந்த நேரமும் நினைப்பு "அதுல"யே இருந்தா இப்படித்தான் தோணும்) பேசாம மேற்கொண்டு படிஙக...

அவளுக்காக ஆய்ந்து எடுத்து வந்த முத்...

"சார்... நீங்க முகநூல் கவிஞர் வந்தை ஆறு தான" மறுபடி வாக்கியத்தை முடிக்க விடாமல் அந்த குரல் தடுத்துவிட "ஹூ இஸ் த டிஸ்டபர்ன்ஸ்" கவுண்டர் ரியாக்ஷனோடு குரல் வந்த திசைக்கு கவனத்தை திருப்பினேன்.

டிப் டாப் உடையோடு இருபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்னர்...

"ஆமா... நான்தான் வந்தை ஆறு. நீங்க?"

"ஐயோ... சார் நாங்க உங்களோட பெரிய ஃபேன் சார்" என்றபடியே... எட்டி கையைப்பிடித்துக்கொண்டாள் அந்த பெண்...

"ஃபேனா?" மனதுக்குள் எழுந்த கேள்வி... தலைல இருக்க பேனே நமக்கு தெரியாது... தள்ளியிருக்குற... ஃபேன்சயா தெரியபோவுது... என்கிற சமாதான எண்ண ஓட்டத்தில் அடங்கிப்போனது.

அதற்குள்ளாக அந்த பெண்ணும்... அவனும் ஆளுக்கொரு பக்கமாய் நெருக்கியபடி...

"சார் ஒரே ஒரு செல்ஃபி"  "சார் ஒரே ஒரு செல்பி" என்று கெஞ்ச ஒருவழியாக செல்பிக்கு ஒத்துழைப்பு கொடுத்து முடித்தேன்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தமிழரசி கனல் கக்கிக்கொண்டிருந்தாள்.

"சார் நீங்க  நிறைய இயற்கை எய்துவீங்களாமே"
அந்த பெண்தான் கேட்டாள்...

அப்பவே சுதாரித்திருக்கவேண்டும். ஃபேன் என்ற போதை மயக்கம் அதையெல்லாம் அப்போது சிந்திக்க விடவில்லை.

"ஆமா...மா, நிறைய எழுதுவேன்... என்னோட ஃபேன் என்கிறீர்கள்... நீங்க படிச்சதில்லையா?"

"அய்யோ... சார், படிச்சதாலதான் உங்கள பிடிச்சிருக்கமே" அவன் கூறினான்.

"என்ன பிடிச்சிருக்கீங்களா?"

"இல்ல சார், படிச்சதாலதான் பிடிச்சிருக்குதுனே... சொல்லவந்தேன். டங்க் ஸ்லிப் ஆகிடுச்சி"

"சரி சரி, இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்?"

"சார் நீங்க எங்க இடத்துக்கு வந்து எங்க பசங்களுக்கு
இயற்கை எய்துறது எப்படினு சொல்லித்தரணும்" மறுபடி அந்த பெண் கூறினாள்.

இந்த பொண்ணுக்கு "ழ"னா சரியா வராதுபோல என்று எண்ணியபடியே...
"ஓ... உங்களுக்கு அவ்ளோ பசங்களா?" என்றேன்.

"ச்சீ போங்க சார்... எங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகல... நா சொன்னது எங்க ப்ரண்ட்ச" வெட்கத்தோடு கால் கட்டைவிரலால் கோலம்போட்டும்... கைவிரலால்  பரத நயமும் பிடித்தபடி பதிலுரைத்தாள் அந்த பெண்.

பார்த்தியாடி என் இரசிக பெருமக்கள என்பதுபோல் தமிழைப்பார்த்து ஒரு லுக்கு விடவும்... க்கும் என்று வாயால் ஒழுங்குகாட்டி முகவாய்க்கட்டை திருப்பிக்கொண்டாள்.

"ஓகே ப்ரண்டஸ்... நா உங்க இடத்துக்கு வரணணும்ணா ஒரு நிபந்தனை இருக்கு"

"என்ன பண்ணனும்? சொல்லுங்க சார்" அந்த பல்பு வாயன்தான் கேட்டான்.

"சிம்பிள்... நான் வரும்போது தனியா வரமாட்டேன். என்னோடு இரண்டு சிறப்பு விருந்தினர்களை அழைச்சுட்டு வருவேன்... சொல்லப்போனா என்னைவிட இயற்கையைப்பற்றி அவிங்க இருவரும்தான் சிறப்பா எழுதுவாங்க... சோ அந்த இடத்துக்கு அவங்க வந்தாதான் சிறப்பு... ஓகேவா?"

"மை... காட், இந்த இன்ப அதிர்ச்சிய நா எப்படி தாங்குவேன்? கேள்வியோடு மறுபடி என் கைகளை பற்றிக்கொண்டாள் அந்தப்பெண்.

"சார் அதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும்... கண்டிப்பா... உங்க மூவருக்காகவும் நாங்க எல்லாரும் காத்திட்டிருப்போம்... இந்தாங்க... இதுதான் எங்க விலாசம் நாளை காலை சரியா பத்துமணிக்கு வந்திடுங்க சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்ய நாங்க கௌம்புறோம்" என்றபடி விசிடிங்கார்டை நீட்டி விட்டு அந்த பெண்ணோடு கிளம்பிவிட்டான் அந்த பல்பு வாயன்.

"என்ன தமிழ் இப்பவாச்சும் நம்புறியா? நான் ஒரு சிறந்த கவிஞன் என்று"

"டேய்... நா ஒருத்திதான்டா உன்னை கவிஞனாவே அங்கிகரிச்சிருக்கேன்... ஆனா எனக்கென்னவோ இதுகள பாத்தா அம்புட்டு ஒன்னும் சரியாப்படல எதுக்கும் சூதானமா இருந்துக்கோ அம்புட்டுதேன் சொல்வேன்"

"போடி... போடி பொறாமை பிடிச்ச கழுத" என்றுவிட்டு திரும்பி நடக்கத்தொடங்கினேன்.

"போடா... போடா... எங்கிட்டு போனாலும் எங்கிட்ட வந்துதான ஆகணும் அப்ப வச்சுக்கறேன் உன்னைய"

தமிழ் சொல்வது காதில் விழுந்து மறைந்தது.

மறுநாள் காலை...

மணி சரியாக பத்து... முன்னமே சிறப்பு விருந்தினர்களான #பாலமுருகன் மற்றும் க கார்த்திக் இருவருக்கும் தகவல் தந்துவிட்டதால்... குறிப்பிட்ட அந்த விலாசத்தில் மூவரும் ஒன்று கூயிருந்தோம்...

ஒரு கருத்தரங்கம் போன்று விழாவுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர் அந்த இருவரும்.

அரங்கத்தில் மேடை அமைக்கப்பட்டு மூன்று முக்கிய நாற்காலிகள் எங்களுக்காக வழங்கப்பட்டிருக்க நேற்று என்னை சந்தித்த அந்தப்பெண் வரவேற்பு நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாள்.

அதன் படி "முதலில் மூத்தவர் பால முருகன் முதலில் இயற்கை எய்திகாட்டுவார்" என்ற அப்பெண்ணின் அறிவிப்பை கேட்டதும் சற்றே திடுக்கிடலோடு என்னை திரும்பிப்பார்த்தார் அவர்.

"அண்ணே அந்த பொண்ணுக்கு "ழ"னா சரியா உச்சரிக்க வராது அதான் அப்படி சொல்றா...

நீங்க பயப்படாம போய் இயற்கையைப்பற்றி எழுதி காட்டுங்க" என்றதும் சற்றே நிம்மதி அடைந்தவராக எழுந்தார் பாலமுருகன்.

ஒலிபெருக்கியை கைகளில் ஏந்தி ஒயிலாக பேசத்தொடய்கினார்...
"டியர் பிரண்ட்ஸ் "இயற்கை எய்துறது" ச்சி தூ... இயற்கையைப்பற்றி எழுதுறது அவ்வளவு சிரமமான விசயமில்லை இப்ப நான் எழுதுறேன் பாருங்க....

என்றபடி பின்புறம் இருந்த கரும்பலகையில் திரும்பி எழுதவும்... எங்கிருந்தோ பாய்ந்து வந்த கத்தி ஒன்று அவர் பின்புறத்தை பதம் பார்க்கவும் சரியாக இருந்தது...

கண நேரத்தில் நேற்று பேசிய அந்தப்பையன் என்னையும் க கார்த்திக்கையும் பிடித்துக்கொள்ள...

கத்திக்குத்தோடு கதி கலங்கி திரும்பிய பாலாவை அந்தப்பெண்ணும் பிடித்துக்கொள்ள...

அரங்கத்திலிருந்த அத்தனைபேரும் ஆனந்த ஆராவாரம் செய்தனர்....

"ஏய்யா நீங்க மூனுபேரும் பிரபலமான கவிஞர்களாச்சே சொன்னபடி நடந்துப்பீங்கனு பார்த்தா யார டபாய்க்கப்பாக்குறிய" அந்த பெண்தான் கேட்டாள்...

"இயற்கை எய்தி காட்டுங்கனு உங்கள கூப்பிட்டா இயற்கையைப்பற்றி கவிதை எழுதிட்டிருக்கீங்க

ஒழுங்கு மரியாதையா நீங்களா எய்திட்டா இயற்கை...

நாங்க எத்தினா செயற்கையாகிடும் சாவு பரால்லயா என்று நேற்று சந்தித்தவன் கர்ஜிக்க...

அப்பதான் புரிந்தது இதுங்க எல்லாம் பைத்தியங்கபோலனு.... என்னடா பண்றதுனு மற்ற நா முழிக்க... மற்ற இருவரும் இப்படி மாட்டி விட்டுட்டானே... என்று என்னை முறைக்க....
அந்த நொடி டாக்டர் ஒருவர் அரங்கத்தில் நுழைய அத்தனை பைத்தியங்களும் அலறியடித்து ஓடத்தொடங்கியது.

"அப்பாடி... கடவுள் மாதிரி வந்து காப்பாத்திட்டீங்க டாக்டர்...

இந்த வந்தை கூப்பிட்டான்னு வந்தோமே எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" பயத்திலிருந்து மீளாதவராய் புலம்பினார் பாலா.

"சரி விடுங்க அதான் ஒன்னும் ஆகல இல்ல, சும்மா அண்ணன கொற சொல்லிட்டிருக்காதிய" என்று பாசத்தை காட்டினான் தம்பி க கார்த்திக்.

"டாக்டர், இவிங்களாம் யாரு? என்னாச்சி இவங்களுக்கு? என் சந்தேகத்தை வினவினேன் டாக்டரிடம்.

"இவங்க எல்லாரும் "பேஸ்புக்பேபியா" என்கிற மனவியாதியால பாதிக்கப்பட்டவங்க வந்தை.
பேஸ்புக்ல பெரிய கவிஞசனா வந்து லைக்கும் கமெண்டும் வாரிக் குவிக்கனும்னு ஆசைப்பட்டு கடைசிவரை  அது முடியாம போகும்போது இளைஞர்கள் இப்படியான வியாதிக்கு ஆளாகிடுறாங்க... அதன் பிறகு உங்களை போல முகநூல் பிரபலங்களை கடத்தி துன்புறுத்துவாங்க சில நேரங்களில் அது கொலையாகவும் வாய்ப்புண்டு"

"அட பாவமே" இரக்கம் காட்டினார் பால முருகன்.

"மட்டுமல்ல பாலா, இதுல "ஸ்டிக்கரோமேனியா"னு இன்னொரு வகையான மன நோயும் இருக்கு இந்த வகையான மனநோய் பாதித்தவங்க... எதையும் எழுதவோ பேசவோ மாட்டாங்க... இவங்களோட முழுநேர தொழிலே பக்கம் பக்கமா உங்களமாதிரியான கவிஞர்கள் எழுதுற இடத்துல பக்காவா ஸ்டிக்கர் ஒட்டிட்டு போறதுதான்"

"இவங்கள குணமாக்கவே முடியாதா டாக்டர்" தம்பி க கார்த்திக் கேட்க...

"அது உங்க கைலதான் இருக்கு தம்பி... இவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்படியாக நீங்கதான் எழுதனும் இனிவரும் தலைமுறைகளை இப்படியான வியாதிகளிலிருந்து நீங்கதான் காப்பாத்தணும்.

"சரியா சொன்னீங்க டாக்டர்" குரல் வந்த திசை நோக்கி திரும்பினால் தேநீர் கோப்பையோடு வந்து கொண்டிருந்தாள் என் தமிழ்....

டாக்டர் இவ எப்படி இங்க... இப்படி ஒரு சம்பவம் நடக்கிறத சரியான நேரத்துல எனக்கு சொல்லி... உங்கள காப்பாற்ற உதவினதே இவங்கதான்.

நன்றியோடு கையெடுத்து கும்பிடபோன என்னை அண்ணனும் தம்பியும் தள்ளிவிட வேகமாக ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன் என் #தமிழை.

♥♥♥♥♥♥♥♥♥சுபம்♥♥♥♥♥♥♥♥♥

மீள்
வந்தை ஆறு